Blog Archive

Monday, November 28, 2022

நாகர்கோயில் படுகொலை

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட 27 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.



1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின.

எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர்.




எம்மைவிட்டு பிரிந்து சென்ற மாணவர்களின் நினைவை சுமந்து வண்ணம் பயணிக்கின்றோம். எமது இனத்தைக் கருவறுக்க, சிங்கள இனவாதிகள் மாணவர்களைக் குறிவைத்தனர். கள்ளம் கபடம் ஏதுமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட மாணவச் செல்வங்கள் அணிந்திருந்த வெள்ளை சீருடைகளில் எல்லாம் இரத்தக் கறைகள்!

STATEMENT ISSUED BY THE UNIVERSITY TEACHERS FOR HUMAN RIGHTS (JAFFNA) ON 10TH OCTOBER 1995
https://uthr.org/Statements/Civilianst.htm

No comments:

Post a Comment

DMK councilor involved in drug trafficking with the help of the Stalin government?

Did you know Nawas of DMK, aka Drug lord, is from the same hometown as a DStock abuser here who sits online & promotes propaganda of Tig...